சவுதி மக்களை சோகத்தில் ஆள்த்திய செளதியின் மூத்த இளவரசர் ஒருவரின் பறிதாபமான பலி - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Tuesday, November 7, 2017

சவுதி மக்களை சோகத்தில் ஆள்த்திய செளதியின் மூத்த இளவரசர் ஒருவரின் பறிதாபமான பலி



ஏமன் எல்லைப்பகுதிக்கு அருகே மூத்த செளதி இளவரசர் ஒருவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவரும், ஏழு அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அஸிர் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின் பல அதிகாரிகளுடன் பயணம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அல்-இக்பாரியா தொலைக்காட்சி சேனல் கூறியுள்ளது.
ஆனால், ஹெலிகாப்டர் தரையில் மோதியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
செளதி அரசின் அரசியல் மற்றும் தொழில் சார்ந்த தலைமை பதவியில் இருந்த இளவரசர்கள் உள்பட பலர் களையெடுக்கப்பட்ட அடுத்த நாள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


ஹெலிகாப்டர் விபத்தில் செளதியின் மூத்த இளவரசர் ஒருவர் பலி

செளதி அரசின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில், 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன் கணக்கான முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டு தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை, முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
முன்னாள் முடிக்குரிய இளவரசர் மிக்ரின் பின் அப்துல் அசிஸின் மகன்தான் இளவரசர் மன்சூர் பின் மிக்ரின்.
2015ல் முடிக்குரிய இளவரசராக பதவியேற்ற மிக்ரின் பின் அப்துல் அசிஸின், சில மாதங்களில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அரசர் சல்மானால் ஒதுக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here