இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வடக்கில் உள்ள இராணுவத்தைக் குறைப்பதற்கான எவ்வித ஒதுக்கீடுகளும் இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் நன்மைகளை அவர் ஐந்து பிரிவுகளாக பரிசீலித்துள்ளார்.
அவையாவன…
1. முன்னாள் போராளிகள், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கான திட்டங்கள்
2. வடக்கு மாகாணத்திற்கான ஏனைய திட்டங்கள் 3. ஏனைய புதிய அபிவிருத்தித் திட்டங்கள்
4. இலங்கை முழுவதற்குமான நாடளாவிய திட்டங்களில் உள்ளடக்கப்பட்ட வட மாகாண அபிவிருத்தித் திட்டங்கள்
5. முஸ்லிம்களின் மீள் குடியேற்றத் திட்டம் இராணுவத்தைக் குறைக்கும் திட்டம் எவையும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிராமையால், தொடர்ந்து இராணுவத்தை வடக்கில் நிலைகொள்ளச் செய்வது தான் அரசாங்கத்தின் முடிவாக இருப்பதாக வட மாகாண முதல்வர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் திட்டத்திற்கு சென்ற வருடம் 3000 மில்லியன் கொடுக்கப்பட்டதாகவும் தெற்கிற்கும் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பணம் ஒதுக்கப்படாமை ஓர் குறையாகத் தெரிவதாகவும் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் பணம் அந்தந்த வருடங்களுக்கு கிடைப்பதில்லை என குறிப்பிட்ட அவர், சென்ற வருடத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தான் முழுமையாகக் கிடைத்தது எனவும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment