உள்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து, மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ...
உள்நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து, மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் பல நாடுகளில் அகதிகளாக உள்ளனர். நெருக்கடி நிறைந்த சூழலில் முகாம்களில் அவர்கள் வசிப்பதனால் சிறு குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று அகதிகள் பலருக்கு போதிய உணவு, சுகாதார வசதி கிடைக்கவில்லை என்றும் அகதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டில்லர்சன் இன்று மியான்மர் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு ராணுவ தளபதி மின் ஆங் மற்றும் சூ கியை சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்பொழுது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளன என கூறியுள்ளார்.
ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் நாட்டு தலைவரான சூ கி அமைதியுடன் இருக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் மியான்மர் தலைநகர் நேபையிடாவில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு சூ கி அளித்துள்ள பேட்டியில், நான் அமைதியாக இருக்கவில்லை. மக்கள், நான் கூறுவது போதிய ஆர்வம் அளிக்கவில்லை என கருதுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நான் கூறுவது பரபரப்பிற்காக அல்ல. அது சரியானது என்ற வகையில் இருக்க வேண்டும். மக்களை ஒருவருக்கொருவர் எதிராக மாற்றுவதற்கு அல்ல என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளை பற்றி கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment