திருவனந்தபுரத்தில் நேற்று இடம்பெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் நேற்றைய போட்டி மழை காரணமாக தாமதித்திருந்தது.
இந்த நிலையில் போட்டி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
அதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் 6 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
போட்டியில் சிறப்பாட்டகாரராகவும், தொடரின் சிறப்பாட்டகாரராகவும் இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவானார்.
இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றும் 8வது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment