கல்முனை ஆக பிரியுமா? அல்லது சாய்ந்தமருது தனியாக உள்ளுராட்சிசபையை பெறுமா அல்லது இப்பிராந்திய மக்களின் போராட்டம் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இன்று மாலைக்கு இடையில் தீர்வு எட்டப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, றவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் ஹரீஸ், முன்னாள் அமைச்சர் அதாவுள்லாஹ், பாராளமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ள கல்முனை மாநகர பிரச்சினை இன்றுடன் சுமுகமாக தீரக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment