கொழும்பு உள்ளிட்ட நாட்டில் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களை காண முடிகின்றது.
இது குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை போதுமான பெட்ரோல் கையிருப்பில் இருப்பதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதும் கொலன்னாவையில் இருந்து பெட்ரோல் விநியோாகம் இடம்பெறுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் கடும் மழைக்கு மத்தியிலும் கண்டி மற்றும் குண்டசாலை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு நீண்ட வரிசையில் வாகனங்களை காணமுடிந்ததது.
எனவே வதந்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் உபாலி மாரசிங்க நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.
தமது தேவைக்கு போதுமான பெட்ரோலை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறும் சேமித்து வைக்க முயல வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோலை ஏற்றிய கப்பல்கள் திட்டமிட்டபடி இலங்கையை வந்தடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment