கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம் - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Thursday, November 2, 2017

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம்

இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களைகௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால்நடாத்தப்படுகின்ற டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில்2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதற்தடவையாகஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான ரங்கனஹேரத் பெற்றுக்கொண்டார்.



இதன்படிகடந்த 3 வருடங்களாக வருடத்தின் சிறந்த வீரருக்கானவிருதினைப் பெற்றுவந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர்அஞ்செலோ மெதிவ்சைப் பின்தள்ளி இவ்விருதைத் தட்டிச் சென்ற ஹேரத்தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகவும் வருடத்தின் சிறந்த டெஸ்ட்பந்துவீச்சாளருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.


உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருதுவழங்கும் விழா நேற்று(31) பத்தரமுல்லையில் உள்ள வோர்டஸ் ஏட்ஜ்ஹோட்டலில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. இதன்போது 60 விருதுகள்வழங்கி வைக்கப்பட்டன.
இதில் அண்மைக்காலமாக இலங்கை அணியில் சகலதுறையிலும்பிரகாசித்து வருகின்ற அசேல குணரத்ன 4 விருதுகளைப்பெற்றுக்கொண்டார்வருடத்தின் சிறந்த T-20 துடுப்பாட்ட வீரர், சிறந்த T-20 சகலதுறை வீரர்ஒரு நாள் போட்டியின் வருடத்தின் சிறந்த சகலதுறை வீரர்மற்றும் வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க வீரர் ஆகிய 4 விருதுகளையும் அவர்தட்டிச் சென்றார்.  
இதேவேளைஇலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித்மாலிங்கவருடத்தின் சிறந்த T-20 பந்துவீச்சாளருக்கான விருதை தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன்வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதைதனன்ஜய டி சில்வா பெற்றுக்கொண்டதுடன்சிறந்த டெஸ்ட் சகலதுறைவீரருக்கான விருதை டில்ருவன் பெரேரா பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில்வருடத்தின் சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளருக்கான விருதைசுரங்க லக்மால் பெற்றுக்கொண்ட அதேவேளைசிறந்த ஒரு நாள் துடுப்பாட்டவீரருக்கான விருதை குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருடத்தின் வளர்ந்து வளரும்வீரருக்கான விருதை விக்கெட் காப்பாளரும்அதிரடித் துடுப்பாட்ட வீரருமானநிரோஷன் திக்வெல்ல பெற்றுக்கொண்டார்.
பெண்கள் பிரிவில்ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளின் வருடத்தின் சிறந்ததுடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதை சமரி அத்தப்பத்துபெற்றுக்கொண்டதுடன்வருடத்தின் சிறந்த T-20 பந்துவீச்சாளராக சுகன்திகாகுமாரியும்ஒரு நாள் பந்துவீச்சாளராக தற்போதைய அணியின் தலைவிஇனோகா ரணவீரவும் தெரிவாகினர்.   
விருது வழங்கும் விழாவைப் பார்வையிட

இம்முறை விருது வழங்கும் விழாவிலும் சிறப்பு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டனஇதில் வருடத்தின் சிறந்த சர்வதேச போட்டி நடுவருக்கானவிருதை குமார் தர்மசேன பெற்றுக்கொண்டார். முதற்தடவையாகஅறிமுகப்படுத்தப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை முன்னாள் வீரர் நீல் பெரேரா பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த வருடம் முதல் வழங்கப்பட்டு வருகின்ற வருடத்தின்சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை ”சண்டே டைம்ஸ்” பத்திரிகையின்விளையாட்டு ஆசிரியர் சம்பிக்க பெர்ணாந்து பெற்றுக்கொண்டார்.
டயலொக் ஆசியாடா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக 5ஆவதுதடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில் சிறப்புவிருந்தினராக இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தை முதற்தடவையாகவென்று கொடுத்த அவ்வணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ்கலந்துகொண்டதுடன்பிரதம விருந்தினராக விளையாட்டுத்துறைஅமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டகபில் தேவ் இந்நிகழ்வில்உரையாற்றுகையில்இலங்கைகிரிக்கெட்டின் வளர்ச்சியை எனதுஇளமைப் பருவத்திலிருந்து பார்த்துவருகின்றேன்நான் இந்திய அணியில்இடம்பெற்ற ஆரம்ப காலம் முதல்இலங்கை கிரிக்கெட், உலகம் முழுவதும்பிரபல்யமடைந்து காணப்பட்டதுமிகவும் குறுகிய காலப்பகுதியில் உலகை நீங்கள் வெற்றிகொண்டீர்கள்இதுதனியொரு வீரரால் கிடைத்த வெற்றி அல்லமாறாக இதனுடன்தொடர்புபட்ட அனைவரது முயற்சிகளின் பிரதிபலனாக நான் இதைபார்க்கிறேன்கடந்த காலங்களில் விளையாடிய பல போட்டிகளில் நீங்கள்தோல்விகளை சந்தித்தாலும்உங்களுடைய ரசிகர்கள் என்றும் போலமைதானத்துக்கு வந்து உற்சாகமளித்தார்கள் என அவரது உரையில்தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here