டி.வி.எஸ். அபாச்சி RR 310: இந்திய வெளியீடு தேதி - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Saturday, November 25, 2017

டி.வி.எஸ். அபாச்சி RR 310: இந்திய வெளியீடு தேதி

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR 310 மாடல் இந்திய வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RR 310 மாடல் இந்தியாவில் டிசம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அபாச்சி RR 310 மாடல் அகுலா கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகமானது.



பி.எம்.டபுள்யூ. G 310 R  மாடலை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடலில் ஒரே இன்ஜின் மற்றும் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 313 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 bhp மற்றும் 28 Nm செயல்திறன் கொண்டுள்ளது.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்திற்கு பல்வேறு அம்சங்களை முதல் முறை வழங்கியுள்ள பெருமையை RR310 பெற்றுள்ளது. அந்த வகையில் டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் ஃபேர்டு (faired) வடிவமைப்பை கொண்ட மாடலாக RR310 இருக்கிறது.

பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் வெர்டிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கொண்ட முதல் மாடலாக இது இருக்கிறது. மற்ற வாகனங்களில் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பட்டை வடிவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக உருவாகி வரும் டி.வி.எஸ். அபாச்சி RR310 இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடல் கே.டி.எம். ஆர்.சி. 390, பென்லி 302R மற்றும் கவாசகி நின்ஜா 300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 சிசி பிரிவில் இந்தியாவில் கிடைக்கும் மற்ற வாகனங்களை விட அபாச்சி RR310 மாடலில் குறைந்த செயல்திறன் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here