எகிப்து: மசூதி தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 305 ஆக அதிகரிப்பு உள்ளே படங்கள்.. - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Saturday, November 25, 2017

எகிப்து: மசூதி தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 305 ஆக அதிகரிப்பு உள்ளே படங்கள்..

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். தொடர்ந்து, துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.



இந்த தாக்குதலில் 184 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



சிகிச்சை பலனின்றி மேலும் பலர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று வரை மசூதி தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 234 என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே, தீவிரவாதிகளின் இந்த
தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் அபாயகரமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு நினைவிடம் அமைக்க எகிப்து அதிபர் அப்துல் பதா எல் சிசி
உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here