இனி ஆங்கிளத்த பற்றி கவலை வேண்டாம்! மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு!! - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Thursday, November 23, 2017

இனி ஆங்கிளத்த பற்றி கவலை வேண்டாம்! மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு!!

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியும்.


மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும்.



மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், உலகின் 60 மொழிகளை மொழி பெயர்க்க முடியும். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழ் மொழி இந்திய துணை கண்டம் மற்றும் உலகம் முழுக்க சுமார் 70 கோடிக்கும் அதிகமானோர் பேசி வருகின்றனர்.


புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் டிரான்ஸ்லேட்டர் செயலியை கொண்டு தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகளையும், மற்ற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கும் மொழி மாற்றம் செய்ய முடியும். இந்த வசதியை பிங் டிரான்ஸ்லேட்டர் வலைத்தளம், மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலிகள் மற்றும் பவர்பாயின்ட் ஆட்-இன், அல்லது ஏ.பி.ஐ கொண்டு 60 மொழி எழுத்துக்களை மொழிமாற்றம் செய்ய முடியும்.


இத்துடன் பத்து மொழிகளில் குரல் டிரான்ஸ்லேஷன் செய்ய முடியும். இத்துடன் ஆஃபிஸ் 365 செயலிகளான வொர்டு, எக்செல், பவர் பாயின்ட் மற்றும் அவுட்லுக் போன்றவற்றிலும் தமிழ் மொழி மாற்றம் வசதியை மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலி வேற்று மொழியில் மற்றவர்கள் பேசுவதை கவனித்து அதனை எழுத்து வடிவில் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்.

மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வழிகளை கேட்கவும், உணவகங்களில் உணவு வகைகளை வாங்கவோ அல்லது மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கவும் பயன்படுத்த முடியும். இந்த செயலி புகைப்படம், மெனு, சைகை, விளம்பர சீட்டு உள்ளிட்டவற்றில் இருக்கும் எழுத்துக்களையும் மொழி பெயர்க்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலி தற்சமயம் தமிழ் இல்லாமல், பெங்காலி மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் கொண்டுல்ளது. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

இந்த புதிய அப்டேட்  வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேற்றுள்ளது....

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here