எரிபொருளுக்கான தட்டுப்பாட்டு நிலவுவதாக வௌியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல் பரவிய வதந்திகளினால் நாட்டில் மீண்டும் பெட்ரோலுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் குழப்பமடைந்தாக அவர் கூறினார்.
தேவையானளவு எரிபொருள் நாட்டின் களஞ்சியசாலைகளிலுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலுள்ள களஞ்சியசாலைகளில் எரிபொருள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சின் செயலாளர், எந்த நேரத்திலும் எரிபொருளை விநியோகிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விநியோகத்தில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்பட்டால் அது தொடர்பில் மக்கள் தகவல்களை அறிவிப்பதற்கு ஏதுவாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சினால் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் இயங்கும் 011 5 455130 என்ற தொலைபேசி இலக்கத்தை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment