கல்முனைத் தாய் பிரிவினை கண்டு அழுவதற்கு யார் காரணம்!!! உண்மையை உணர்ந்து வழி விடுங்கள்!!!!! - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Thursday, November 23, 2017

கல்முனைத் தாய் பிரிவினை கண்டு அழுவதற்கு யார் காரணம்!!! உண்மையை உணர்ந்து வழி விடுங்கள்!!!!!

என்பதை ஆழமாக சிந்திப்பார்களேயானால் யாரும் யாருனுடனும் கோபிக்க மாட்டார்கள்இமாறாக இதற்கு மூலகாரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதற்குத்தான் தண்டனை வழங்க முற்படுவார்கள்.

கல்முனை நகரம் என்பது பல தலைசிறந்த அரசியல்வாதிகளை பெற்றெடுத்த நகரமாகும் ஒருகாலத்தில் அம்பாரை மாவட்ட மக்கள் மாத்திரமல்ல வேறு பல ஊர்மக்களும் கல்முனையை மையமாக கொண்ட அரசியல்வாதிகளிடம் உதவி பெற்றுச்சென்ற வரலாறுகளும் உண்டு.

முஸ்லிம்களின் முகவெற்றிலை என்று இனம்காணப்பட்ட கல்முனை நகருக்கு பெருமை சேர்க்கும் முகமாக அன்றய ஜனாதிபதி பிரமதாசா அவர்களினால் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சி பதவியொன்றை ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களுக்கு வழங்கியிருந்தார். அமைச்சிப் பதவி என்பது கல்முனை மக்களுக்கான சொத்தாகவும் பெருமையாகவுமே அன்று கல்முனை மக்களினால் கருதப்பட்டிருந்தது.


அன்றிருந்த பயங்கரவாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அந்த அமைச்சினூடாக எல்லா ஊர்களையும் ஒன்றினைத்து பலமான ஒரு கல்முனையை கட்டியெழப்பியிருந்தார் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்கள். இந்த நிலையில்தான் எங்களுக்கு அபிவிருத்திகள் வேண்டாம் உரிமைதான் வேண்டும் என்ற கோசத்துடன்வந்த சட்டத்தரணியான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களை அன்றய சூழ்நிலையின் காரணமாக கல்முனை மக்கள் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.


அந்தக்காலப்பகுதியில் பயங்கரவாத பிரச்சினைகள் உச்சம் பெற்றிருந்ததனால் யாரும் அபிவிருத்தியைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லைஇ மாறாக தங்களுடைய உயிர் உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கே முன்னுறிமை கொடுத்து வந்தார்கள். அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் மூலம் அபிவிருத்திகள் நடக்காது விட்டாலும் அதனை ஆதரித்து வந்தார்கள்.


இருந்தாலும் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அஷ்ரப் அவர்கள் அதிகாரம் பொருந்திய அமைச்சி பதவியைப் பெற்று சில சேவைகளை இந்த கல்முனை நகருக்கு செய்திருந்தார்.  இருந்தாலும் பயங்கரவாத பிரச்சினையின் காரணமாக அவரினால் பூரணமாக செயல்பட முடியாமலும் இருந்தது என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது.


இன்றுபோன்று அன்று சுமுகமான நிலையிருந்திருந்தால் அஷ்ரப் அவர்கள் மூலம் கல்முனை நகரம் கடும் வழர்ச்சியடைந்திருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கவும் முடியாது.


இந்த நிலையில்தான் அஷ்ரப் அவர்கள் அகால மரணம் அடைகின்றார்இ அதன் பின் மு.காங்கிரஸின் தலைமை பதவியுடன் சேர்த்து கல்முனைக்கான பலம் பொருந்திய அமைச்சுப் பதவியும் ஊர்கடந்து சென்று விட்டது. இதன் காரணமாக கல்முனை நகரம் அரசனும் இன்றி புரிசனும் இன்றி அநாதையாக மாறியிருந்தது.


இந்த நிலையில்தான் கல்முனையுடன் இணைந்திருந்த பக்கத்து ஊர்கள் தங்களை பிரித்து விடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்று கேட்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். இது ஏன் என்று பார்த்தால் கல்முனை நகரம் பலம் பொருந்திய அமைச்சிப் பதவியை பெற்ற அரசியல்வாதி இல்லாததே அதற்கு காரணமாகும். அபிவிருத்திகளை அள்ளி வீசியிருந்தால் யாரும் இதணைப்பற்றி பேசியிருக்க மாட்டார்கள்.


கல்முனையின் நகரம் மட்டுமல்ல கல்முனைக்குடிக்கும் எந்த அபிவிருத்தியும் திருப்தியாக நடக்கவில்லைஇ இந்த நிலையில் பக்கத்து ஊர்களையும் கவணிப்பதற்கு அவர்களினால் முடியாமல் இருக்கின்றது. இந்த நிலையில்தான் இவர்களை நம்பியிருந்தால் நாமும் புறக்கணிக்கப்படுவோம் என்ற நிலையில்தான் எங்களை பிரித்து விடுங்கள் நாங்கள் எங்கள் தேவைகளை யாரைக்கொண்டாவது நிவர்த்தி செய்து கொள்ளுகின்றோம் என்று அவர்கள்  கோரி நிற்கின்றார்கள்.


ஆகவே கல்முனையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் பலம் பொருந்திய அரசியல்வாதியினால் மட்டுமே முடியும் அது எந்தக்காலத்திலும் நடக்காது என்ற காரணத்தினால் அவரவர் தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்து கொள்வதற்கு அவர்களை தனியே விடுவதுதான் சரியானதாகும். அதனை விட்டுவிட்டு நாங்களும் சுண்டலுடன்தான் சாப்பிடுகின்றோம் நீங்களும் சுண்டலுடன்தான் சாப்பிட வேண்டும் என்று ஒருவனை வழக்கட்டாயப்படுத்தி சாப்பிடவைப்பது எப்படி நியாயமாக முடியும்.


தங்களுக்கே உழைப்பது காணாமால் இருக்கும்போது மற்றவனையும் இணைத்துக்கொண்டு வயிறுமுட்ட சோறுபோட முடியாத நிலையிலிருப்பவன்இஎப்படி மற்றவனும் எங்களைப்போன்றே பசியால் வாடவேண்டும் என்று கூறுவது என்று கேட்கிறேன்.


தானும் வயிறுமுட்ட சாப்பிட்டு மற்றவனுக்கும் வயிறுமுட்ட சாப்பிடக் கொடுத்தால் யார்தான் பிரிந்துபோக கேட்பான் என்பதை நாம் ஏன் சிந்திக்கத் தவறுகின்றோம் என்றுதான் புரியவில்லை.


ஆகவேஇ  இதற்கெல்லாம் காரணம் என்னவென்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.பிழைகள் எங்கே நடத்திருக்கின்றது என்று கண்டுபிடித்து அதற்கு பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு. அபிவிருத்தி பசி காரணமாக பிரிந்துபோக கேட்கும் ஊர் மக்களை வசைபாடுவதில் எந்த நியாயமும் இல்லை என்பதே எங்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here