கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு சீனா தயார்! - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Tuesday, November 21, 2017

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு சீனா தயார்!


கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்து உள்ளது.


பெய்ஜிங்:

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது.

இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.

இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகனை ஏற்கனவே 7 முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-வது தடவையாக அடுத்த ஆண்டு (2018) மீண்டும் ஏவி பரிசோதிக்கப்பட உள்ளது.

தற்போது சீனாவின் மக்கள் விடுதலை படை (ராணுவம்) பிரிவில் உள்ளது. இத்தகவலை சீன ராணுவ உயர் அதிகாரி குயாங்யூ தெரிவித்துள்ளார்.

இந்த சீன ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ரஷிய நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here