நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஏற்படுத்திய ஆணைக்குழுக்கள் வினைத்திறனான முறையில் செயற்படுவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் நிறைவெற்றப்படுவதாகவும் பாராளுமன்றத்தில் நேற்று ஆரம்பமான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் குறிப்பிட்டார்.
விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவிக்கையில் ,
போலிப் பிரசாரங்களின் மூலம் நாட்டின் அபிவிருத்தியை சீர்குலைக்க சிலர் முயன்று வருகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார். மக்களை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன குறிப்பிடுகையில்,
சுற்றாடலை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு, வன அடர்த்தியும் அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறினார். கிராம சக்தி என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பிற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் தலா எட்டாயிரம் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகார முறைமை என்பனவற்றை மாற்றுவதற்கான கலந்துரையாடல்கள் நாட்டில் ஆரம்பமாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும் என்று அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஜனநாயத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக விவாதத்தில் உரையாற்றிய குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Saturday, November 18, 2017
நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுகின்றது.......!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment