முஸ்லிம் நாடுகள் இலங்கை சிறுபான்மை மக்களின் விடயத்தில் முலுமையாக கவனம் செலுத்த வேண்டும்!! - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Thursday, November 23, 2017

முஸ்லிம் நாடுகள் இலங்கை சிறுபான்மை மக்களின் விடயத்தில் முலுமையாக கவனம் செலுத்த வேண்டும்!!

"சர்வதேச சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கம் என்ற அடிப்படையில் உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் இலங்கை சிறுபான்மை மக்களின் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று முஸ்லிம்களுக்கெதிராக இலக்கு வைத்து நடாத்தப்படும் இனவாதத்தாக்குதல்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் (OIC) வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு, ஜெனிவாவில்  நடைபெற்ற இலங்கை தொடர்பிலான மனித உரிமை மீளாய்வுக் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் நாடுகளினால் எதுவும்  பேசப்படாமை குறித்தும் தனது கவலையினை தெரிவித்தார்.



கடந்த வாரம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான காலக்கிரம மீளாய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஜெனிவா சென்றிருந்தார். இதன்போது, இலங்கை சிறுபான்மை மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சர்வதேச இராஜ தந்திரிகளிடனான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

அதில் ஒரு அங்கமாக உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பின் (OIC) ஜெனிவாவுக்கான தூதுவர் அய்சாற்றா கேன் உடன்  விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பு கடந்த 17 ஆம் திகதி மாலை ஜெனிவாவில் அமைந்துள்ள OIC தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான், கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை தொடர்பிலான மனித உரிமை மீளாய்வுக் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் விடயங்கள் பேசப்படாமை குறித்து தனது கவலையினை தெரிவித்தார்.

OIC அமைப்பின் அங்கத்துவ நாடுகளான முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் இது பற்றிய கேள்விகளை முன்வைக்கும் ஏன் தவறினார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், OIC அமைப்பு சர்வதேச சமூகத்தின் முக்கிய ஒரு அங்கம் என்ற வகையில் இலங்கை சிறுபான்மை மக்கள் நலன்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு முஸ்லிம்களையும் அவர்களது பொருளாதார நலன்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வெறுப்புணர்வு மற்றும் இனவாத நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலமையினையும் அதற்குக் காரணமானவர்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகிறது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்து அதனை பெரும் வன்முறைகளாக மாற்றியவர்களுக்கெதிரான பொலிஸ் முறைப்பாடுகள் ஏராளமாக செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்களின் விடயத்தில் அரசாங்கம் மிக மென்மையாகவே நடந்து கொள்கிறது என்ற விடயத்தினையும் OIC அமைப்பின் பிரதித்தூதுவரிடம் முன்வைத்தார். இதன் விழைவாக மீண்டுமொரு இனவாதத்தாக்குதல் தற்போது காலிப் பிரதேசத்தில் தொடங்கியிருக்கிறது என்பதனையும் OICயின் பதூதுவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் கருத்துக்களை கவனமாகச் செவி மடுத்த தூதுவர் இந்த விடயங்களை OIC அமைப்பின் செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாகவும் இது தொடர்பிலான உரிய இராஜ தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு OIC யின் செயலாளர் நாயகத்தோடு நேரடியாக இந்த விடயங்களை பேசுவதற்காக ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்களின் போது NFGGயின் செயற்குழு சிரேஸ்ட உறுப்பினரான முஹம்மட் இஸ்ஸதீன் அவர்களும் ஜெனிவாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான முயீஸ் வஹாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here