காலி, கிந்தொட்டை பகுதியில் நேற்றிரவு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தபட்டதும் சொத்துக்கள் சேதமாக்கபட்டதும் அறிந்ததே. விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கியதை அடுத்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வாரபட்டது.
அத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டமும் கொண்டு வரபட்டது.
இதுவரை இரு தரப்பில் இருந்தும் 19 பேர் வரை கைதாகி உள்ளதாகவும், மக்கள் தொடர்ந்தும் ஒருவித அச்சநிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பை தொடர்ந்தும் தரவேண்டும் எனவும் ஊர் பெயியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய இரவை தாங்கள் அச்சத்துடன் எதிர்நோக்குவதாகவும்
பாதுகாப்பை பலப்படுத்த அரச தரப்புக்கு அழுத்தம் வழங்குமாறும்
, தமக்காக அனைவரும் துஆ செய்யும் படியும் கேட்டுக் கொண்டார்.
தளர்த்தபட்ட ஊரடங்கு சட்டம் மாலையில் மீண்டும் அமுலுக்கு வர வாய்ப்பிருப்பதாக தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment