இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லை - POWER OF PEOPLE'S
உங்களுடையே பொருட்களை இலகுவாக விற்பனை செய்ய அல்லது உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள.... தொடர்பு கொள்ளுங்கள் +94755677602
>

Cricket

PROGRESS

Friday, November 10, 2017

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லை


இந்திய அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.  

பாண்டியா இலங்கை அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட்போட்டிகளுக்கமான 16 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் குழாத்தில்உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும்அதிக போட்டிகளில் விளையாடி தற்போதுகூடிய வேலைச் சுமையினை எதிர் கொண்டு வருவதினாலேயே அவருக்குஇந்த ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய அணியின் தேர்வுக்குழாம்தெரிவிக்கின்றது.
இலங்கை அணிக்கெதிராகவே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாயிருந்த 24 வயதாகும் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியினை அனைத்துப்வகைப் போட்டிகளிலும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வீரராக காணப்படுகின்றார்.
இந்த வருடத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அடுத்துபாண்டியா இதுவரை 22 ஒரு நாள் போட்டிகள்மூன்று டெஸ்ட் போட்டிகள்மற்றும் ஐந்து T-20 போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியிருக்கின்றார்.
இந்தியாஇலங்கை அணிக்கெதிராக தமது சொந்த மண்ணில் நடைபெறும்தொடரினை அடுத்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம்மேற்கொள்ளவுள்ளதுஇந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்காகதிறமையாக செயற்படக்கூடிய வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஹர்திக்பாண்டியா என்பதனால் அவருக்கு பாரிய உபாதைகள் எதனையும்ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் ஓய்வினை வழங்கவும் இந்திய அணிமுகாமைத்துவம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளைஇலங்கை அணியுடனான பயிற்சிப் போட்டியில் விளையாடும்13 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்பதினொருவர்  அணியினை தலைமை தாங்க ஏற்கனவேதீர்மானிக்கப்பட்டிருந்த  விக்கெட் காப்பாளர் நாமன் ஓஹ்ஜா தற்போதுஉபாதைக்கு ஆளாகியிருப்பதால் அவருக்குப் பதிலாக பஞ்சாப்பை சேர்ந்தஅன்மோல்ப்ரீத் சிங் விருந்தினர் தரப்பினை எதிர்கொள்ளஅழைக்கப்பட்டுள்ளார்.
முதல்தரப் போட்டிகளில் அண்மையில் அறிமுகமாயிருந்த சிங்ஒரு அரைச்சதம்இரண்டு சதங்கள் (ஒரு இரட்டைச் சதம் அடங்கலாகஎன்பவற்றினைவிளாசி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுஅதோடு ஓஹ்ஜாஇல்லாததன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்அணியினை கேரளாவினைச் சேர்ந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சஞ்சுசாம்சன் தலைமை தாங்குகின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here