அம்பலன்தொட்டை – கொக்கல்லை – லையம் சந்தி பகுதியில் காவல்துறையின் சமிஞையை மீறி பயணித்த பாரவூர்தி மீது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.05 அளவில் இடம்பெற்றதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீதியில் காவற்துறையினர் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன்போது உந்துருளியில் தலைகவசம் இன்றி இருவர் பயணித்துள்ள அதேவேளை, அவர்களை தொடர்ந்து சிறிய ரக பாரவூதி ஒன்று காவற்துறையினரின் சமிஞைகளை மீறி பயணித்துள்ளது.
இதன்போது குறித்த பாரவூர்தி காவற்துறையின் சோதனை சாவடியின் பக்கமாக திருப்பட்டு, காவற்துறையினரை அச்சமூட்டும் வகையில் பயணித்ததாகவும் காவற்துறையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த பாரவூர்தியில் பயணித்தவர்கள் காவற்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து காவற்துறையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பாரவூதியில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வீழ்ந்த வெத்து ரவைகளும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, காவற்துறையினரின் சமிஞைகளை மீறி பயணித்ததாக கூறப்படும் பாரவூர்தியின் சாரதியும் மற்றுமொருவரும் இன்று காலையில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த பாரவூர்தியில் திருடப்பட்ட வாழை குழைகள் ஏற்றி செல்லப்பட்டதாக சரணடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment