இந்தியா-சீனா எல்லை அருகில் திபெத் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.
சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அருகே உள்ள இப்பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.34 மணிக்கு நிஞ்சியா பகுதியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக ஆட்டம் கண்டன. பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதன்பின்னர் அதே பகுதியில் பீஜிங் நேரப்படி காலை 8.31 மணிக்கு 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கடியில் 6 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன அரசு ஊடகம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Saturday, November 18, 2017
இந்தியா-சீனா எல்லை அருகே கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment