4 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய மாணவனின் சடலம்! தவிக்கும் பெற்றோர்
சாய்ந்தமருது கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளது.
17 வயதுடைய சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் திருக்கோவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருக்கோவில் பொலிஸார் குறித்த மாணவனின் குடும்பத்தினருக்கு அறிவித்த நிலையில் அவர்கள் திருக்கோவில் கடற்கரைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
பிரேதபரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று பொலிஸார் மற்றும் நீதிபதி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
மகன் உயிரோடு இருக்கின்றாரா? மரணித்துவிட்டாரா? என்று தெரியாமல் கடந்த 4 தினங்களாக தவித்துக்கொண்டிருந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு மாணவன் உயிரிழந்த செய்தி கிடைக்கப்பெற்றதும் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஆறு மாணவர்கள் சாய்ந்தமருது பீச்பார்க் கடலில் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, November 14, 2017
Home
Local news
4 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய மாணவனின் சடலம்! தவிக்கும் பெற்றோர்
4 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய மாணவனின் சடலம்! தவிக்கும் பெற்றோர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment