ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டிற்குள் அந்த நாட்டின் ராணுவம் புகுந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றி இருக்கிறது. மேலும் அந்த நாட்டின் அதிபர் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற அதிகாரிகள் அனைவரும் அங்கு கைது செய்யப்பட்டு, அவர்களது அலுவலக அறையிலேயே வைக்கப்பட்டு இருக்கின்றனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்று கூறுகிறார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் அங்கு புரட்சி வெடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்டுகிறது.
மிக நீண்ட ஆட்சி
1980 வருடம் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 37 வருட இந்த ஆட்சியில் முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. நாடும் நிறைய வகைகளில் முன்னேறியது. ஆனால் 2000ல் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் தலைகீழானது. அரசின் முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருந்தது. வறுமை ஆட்டிப்படைக்க தொடங்கியது.
ராணுவம் கைப்பற்றியது
இந்த நிலையில் நேற்று காலை அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாட்டிற்குள் புகுந்தது. மேலும் நாடாளுமன்றத்திற்குள் சென்ற ராணுவம் அதன் உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் வழிகளை அடைத்தது. இதன் காரணமாக அந்த நாடாளுமன்றத்திற்குள் இருந்த அதிபர் ராபர்ட் மோகபி வெளியே செல்ல முடியாமல் அங்கேயே மாட்டிக் கொண்டார். அவருடன் மற்ற அதிகாரிகளும் உள்ளேயே இருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டார் ராபர்ட் மோகபி
இன்று காலை ராபர்ட் மோகபி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவி கிரேஸ் ராபர்ட் மோகபியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர்களது சொந்த வீடும் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் தயவு தாட்சணை இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
எதற்காக நடந்தது
இந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் மோகபி மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். இது முதல் காரணமாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டில் நிலவும் சட்ட முறைகளும் , வறுமையும் இரண்டாவது காரணமாக சொல்லப்படுகிறது.
ராணுவம் மறுப்பு தெரிவித்தது
இந்த ராணுவ புரட்சியை ஏற்படுத்திய தலைமை ராணுவ அதிகார 'சிபுசிசோ சோயோ' இது குறித்து பேசினார். அப்போது ''இது ராணுவ புரட்சி இல்லை. நம்நாட்டு அதிபரை தீயவர்களிடம் இருந்து காப்பற்ற முயற்சித்து வருகிறோம். அவர் மிகவும் கெட்டவர்களால் சூழப்பட்டு இருக்கிறார். எல்லாம் சரியான பின் மீண்டும் நாங்கள் சென்று விடுவோம்'' என்றார். ஆனால் ராபர்ட் மோகபி கைது செய்யப்பட்டதன் காரணமாக அங்கு கண்டிப்பாக ராணுவ ஆட்சி ஆரம்பித்து இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment